ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்களித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக எம்எல்ஏ சரஸ்வதி, பாஜக தேர்தலை புறக்கணித்தாலும் ஜனநாயக கடமையான வாக்களிக்க வந்துள்ளேன். பொதுவாக இந்த இடைத்தேர்தல் என்பது இரண்டாவது முறையாக நடக்கின்றது. இங்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் இது மூன்றாவது தேர்தலாகும். இப்படி அடிக்கடி தேர்தல் நடப்பதால் மக்களுக்கு தான் அது கஷ்டம். அதேசமயம் அரசுக்கு வீண் செலவு. நிர்வாகமும் பாதிக்கிறது. அதனால் ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை அமலாக்க அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும்.

ஒரு தொகுதியில் ஒரு வேட்பாளர் இறந்து விட்டால் தொகுதியில் ஏற்கனவே வென்ற கட்சிக்கு தருவது என்றெல்லாம் யோசனை கூறப்படுகின்றது. இது தொடர்பாக சட்டம் ஏற்று தான் முடிவு செய்ய வேண்டும். ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் வருவது தான் சிறந்தது. ஈரோடு கிழக்கு தொகுதியில் தற்போது தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் விதிகள் காரணமாக அதிகாரிகள் வேலை செய்ய முடியவில்லை. ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் என்றாலும் மேற்கு தொகுதியில் கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக சரஸ்வதி பேசியுள்ளார்.