
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருமனை அருகே முழுக்கோடு பகுதியில் 16 வயது மாணவி ஒருவர் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த மாணவி 11ஆம் வகுப்பு முடித்த நிலையில் 12ஆம் வகுப்பு செல்ல இருந்தார். இவர் அடிக்கடி செல்போனில் நண்பர்களுடன் பேசியதாக கூறப்படுகிறது.
இவர் நண்பர்களுடன் நீண்ட நேரமாக செல்போனில் பேசியதை அடிக்கடி பெற்றோர் கண்டித்தனர். இருப்பினும் சிறுமி காதில் வாங்கிக் கொள்ளாமல் தன் நண்பர்களுடன் செல்போனில் பேசினார். இந்நிலையில் நேற்று மாணவி வீட்டில் செல்போனில் நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பெற்றோர் கண்டித்துள்ளனர். இது சிறுமிக்கு மன வேதனையை ஏற்படுத்திய நிலையில் உடனடியாக மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்து விட்டார்.
இதில் சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் உடனடியாக பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் அங்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.