
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹிருஷிகேஷைச் சேர்ந்த தம்பதிகள் ரஞ்சித் – பபிதா. இவர்கள் நன்றாக குடும்பம் நடத்தி வந்த நிலையில் ரஞ்சித்துக்கு அனிதா என்ற பெண்ணுக்கும் சில வருடங்களாக திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக ரஞ்சித் தனது மனைவி பபிதாவிடம் அடிக்கடி சண்டையிட்டு அவரை அடித்து வந்துள்ளார்.
இதனால், பபிதா தனது நண்பர்களுடன் சேர்ந்து அனிதாவை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி, கடந்த மே 25ஆம் தேதி அன்று அனிதாவை கோயிலுக்கு வருமாறு பபிதா அழைத்துள்ளார். இதனையடுத்து கோயிலுக்கு வந்த அனிதாவை பபிதா கொலை செய்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பபிதா மற்றும் அவரது நண்பர்களை கைது செய்துள்ளனர்.