இந்தியாவில் மூத்த குடிமக்களுக்காக மத்திய அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் அந்த திட்டங்களில் ஒன்றுதான் அடல் ஓய்வூதிய திட்டம். இந்த திட்டம் மூலமாக ஏராளமானோர் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் அடல் ஓய்வூதிய திட்டத்தின் பயனாளிகளுக்கு குறைந்தபட்ச உத்திரவாத தொகையை இரட்டிப்பாக மத்திய அரசு முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சேமிப்பு தொகையின் அடிப்படையில் தற்போது ஆயிரம் ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை ஓய்வூதியமாக மத்திய அரசு வழங்குகிறது. புதிய திட்டம் சரியாக இருந்தால் இது இரட்டிப்பாகும். 2015 ஆம் ஆண்டு ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த ஓய்வூதியம் கிடைக்கும்.