இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் ரீல்ஸ் மோகம் என்பது அதிகரித்து வருகிறது. இதனால் இளைஞர்கள் பலர் விபரீதமான செயல்களில் ஈடுபடும் நிலையில் சில சமயங்களில் உயிர் சேதம் ஏற்படும் அளவுக்கு போய்விடுகிறது. அந்த வகையில் தற்போது ரீல்ஸ் மோகத்தால் வாலிபர் ஒருவர் தண்டவாளத்தில் காரினை ஓட்டியுள்ளார். இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்றது. அதாவது தண்டவாளத்தின் மீது காரை அந்த நபர் ஓட்டி வந்த நிலையில் அவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் சரக்கு ரயில் ஒன்று வந்த நிலையில் அவரால் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்க முடியவில்லை. உடனடியாக சரக்கு ரயில் ஓட்டுனர் கார் நிற்பதை  கவனித்து ரயிலை நிறுத்திவிட்டார்.

இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்ட நிலையில் சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தண்டவாளத்தில் இருந்து காரை வெளியே எடுத்த நிலையில் அவர் காரை வேகமாக ஓட்டி தப்ப முயன்றார். ஆனால் அவரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர். அதாவது அவருடைய காரை துரத்தி சென்று போலீசார் எப்படியோ மடக்கிப்பிடித்து விட்டனர். மேலும் ரயில் தண்டவாளத்தில் இது போன்ற ரீல்ஸ் வீடியோ எடுக்கும் போது பலர்  ரயிலில் அடிபட்டு இறந்து விடுகிறார்கள். எனவே ரீல்ஸ் மோகதால் வாலிபர்கள் இதுபோன்ற விபரீதமான செயல்களில் ஈடுபடக்கூடாது. இது குறித்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.