பிரபல நடிகரான அஜித் மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து முடித்து விட்டார். அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். விடாமுயற்சி படத்தை ஆரம்பித்ததில் இருந்து படக்குழு ஏராளமான சிக்கல்களை கடந்து வந்துள்ளது. படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ன ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து இருமுடி கட்டி செல்கின்றனர். இந்த நிலையில் சபரிமலைக்கு சென்ற அஜித் ரசிகர்கள் சிலர் பேனரை கையில் பிடித்துக் கொண்டு அஜித்தே கடவுளே என கோஷமிட்டுள்ளனர். பேனரில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் டீசரை வெளியிட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. கடந்த மாதம் விக்ரவாண்டில் நடைபெற்ற விஜய் மாநாட்டிலும் அஜித்தே கடவுளே என கோஷமிட்டது குறிப்பிடத்தக்கதாகும்.