உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள புடாவன் மாவட்டத்தில் குரங்கு குட்டி ஒன்றை இருவர் சித்திரவதை செய்து கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் மனதை பதற வைத்துள்ளது. இந்த வீடியோவில் இரண்டு நபர்களும் குட்டி குரங்கை கட்டையால் அடிக்கும் நிலையில் குரங்கு பரிதாபமாக கத்துகிறது. குட்டி குரங்கு வலியால் துடிதுடிக்க இரண்டு நபர்களில் ஒருவர் அதனை தொடர்ந்து உதைக்கின்றார். அப்பாவியான அந்த குரங்கை மரத்தடி மூலமாக பலமுறை தாக்குகின்றார்.

அதன் பிறகு அருகில் உள்ள அழுக்கு சதுப்பு நிலத்தில் வீசுகின்றனர். இந்த கொடூர தாக்குதலில் வீரியம் தாங்க முடியாமல் குரங்கு குட்டி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றத்தில் ஈடுபட்ட இரண்டு பேரில் ஒருவர் எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் குரங்கை தொடர்ந்து துன்புறுத்துகிறார். அருகில் உள்ள மற்றொரு நபர் அவரை தடுத்து நிறுத்தவில்லை. இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில் பலரும் அந்த நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி வருகிறார்கள்.