தர்மபுரி மாவட்டத்தில் பழனிச்சாமி-கிருத்திகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இருவருமே மருத்துவராக வேலை பார்க்கின்றனர். இவர்களுக்கு பிறந்த 4 மாதமே ஆன கை குழந்தை உள்ளது. இந்த நிலையில் பழனிச்சாமி தனது மனைவி மற்றும் குழந்தையுடன் பழனி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக காரில் கிளம்பியுள்ளார். அந்த காரை கிருத்திகாவின் தம்பி பாவேந்தர் கூகுள் மேப் பார்த்தபடி ஓட்டி சென்றுள்ளார். இந்த நிலையில் வேடசந்தூர் அருகே நான்கு வழிச்சாலையில் தம்மனம்பட்டி பகுதியில் அதிகாலை 5 மணிக்கு கார் சென்று கொண்டிருந்தது.

அப்போது பழனிக்கு செல்ல மண் சாலையை கூகுள் மேப் காட்டியது. அந்த வழியில் சுமார் 10 கிலோமீட்டர் சென்றதும் கார் சேற்றுக்குள் சிக்கியது. அங்கிருந்து காரை இயக்க முடியவில்லை. அந்த இடம் குழியாக இருந்ததால் காரில் இருந்து அவர்களால் இறங்கவும் முடியவில்லை. இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சேற்றில் சிக்கிய காரை பத்திரமாக மீட்டனர். அதன் பிறகு அவர்கள் வேடசந்தூர் வழியாக பழனிக்கு புறப்பட்ட சென்றனர். இந்த சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.