
இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் சமீபத்தில் ரீசார்ஜ் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தன. இதனைத் தொடர்ந்து அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் கட்டண உயர்வை அறிவிக்கவில்லை. அத்துடன் மலிவு கட்டண திட்டங்களையும் வழங்குகிறது. அதே சமயம் ஒருபுறம் 4ஜி தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டே மறுபுறம் வாடிக்கையாளர்களை தக்க வைக்க புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது.
அதனைப் போலவே தனியார் நிறுவனங்களும் டேட்டா திட்டம் வழங்குகின்றன. அதன்படி 16 ரூபாய்க்கு வழங்கப்படும் திட்டத்தை இதில் பார்க்கலாம்.
பிஎஸ்என்எல்- ரூ.16 – 2 ஜிபி டேட்டா
ஜியோ 19 ரூபாய்க்கு ஒரு ஜிபி டேட்டா
ஜியோ 29 ரூபாய்க்கு 2 ஜிபி டேட்டா
ஏர்டெல் 22 ரூபாய்க்கு ஒரு ஜிபி டேட்டா
ஏர்டெல் 33 ரூபாய்க்கு 2 ஜிபி டேட்டா
வோடபோன் ஐடியா 22 ரூபாய்க்கு ஒரு ஜிபி டேட்டா
வோடபோன் ஐடியா 33 ரூபாய்க்கு 2 ஜிபி டேட்டா