இன்றைய காலகட்டத்தில் தினந்தோறும் புதுவிதமான வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதிலும் குறிப்பாக செல்லப் பிராணிகள் குறித்த வீடியோக்கள் அதிகளவில் இணையத்தில் பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

ஆகவே வீட்டில் செல்லப்பிராணிகளான நாய் மற்றும் பூனையை வளர்க்கும் போது இரண்டுமே ஒன்றோடு ஒன்று பாசமாக இருக்கும். சில நேரங்களில் அவை செய்யும் செயல்கள் பலரையும் வியக்க வைக்கும். அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் பூனை ஒன்று நாயின் தலையை தன் மடி மீது வைத்துக் கொண்டு நாக்கால் நக்கி தடவி கொடுக்கிறது. அந்த நாயும் சுகமாக உறங்கிக் கொண்டிருக்கிறது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.