
நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பெங்களூர் அணிக்கு எதிராக குஜராத் அணி இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த சூழலில் குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் கடந்த மூன்று போட்டிகளில் முறையே 74 ,63, 49 என குஜராத் அணியின் வெற்றிக்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறார் .இவர் இடது கை ஆட்டக்காரராக இருக்கும் நிலையில் இந்திய அணியில் இவருக்கு எந்த வடிவத்திலும் வாய்ப்பு கொடுக்கலாம் என்று இந்தியா முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், ” நான் சாய் சுதர்சனின் தீவிர ரசிகனாக மாறியுள்ளேன். அவர் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கிறார். அவர் பேட்டிங் செய்யும் விதம் அற்புதமாக இருக்கிறது. அவரை பார்க்கும் பொழுது எனக்கு சுனில் கவாஸ்கர் நினைவு தான் வருகிறது. குறிப்பாக அவர் பந்தை தன்னுடைய உடலுக்கு அருகில் வைத்து விளையாடுவதால் இந்திய அணியில் எந்த வடிவத்திலும் இவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம்” என்று கூறியுள்ளார்,.