இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிராக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன . குற்றவாளிகளுக்கு அரசு தக்க தண்டனை  கொடுத்தாலும் குற்றங்கள் இன்னும் குறைந்தபாடில்லை. மனிதர்களுக்கு தான் இந்த நிலைமை என்றால் விலங்குகளையும் ஒரு சில காமக் கொடூரர்கள் விட்டு வைப்பதில்லை. அந்த வகையில் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் தொகலப்பட்டியை சேர்ந்தவர் சீதாராமையா.

இவர் தன்னுடைய எருமை மாட்டை குண்டர்கள் பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார் அளித்துள்ளார். 10 நாட்களுக்கு முன்பாக கொட்டகையில் கட்டப்பட்டிருந்த எருமை நடக்க முடியாமல் போய் உள்ளது. அதன் பிறகு கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்று காட்டிய போது எருமை பலாத்காரம் செய்யப்பட்டது .ஆனால் இந்த சம்பவத்தை போலீசார் அலட்சியப்படுத்தியதால் அவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து  போலீசார் மற்றும் கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்துள்ளனர்.