பிரான்ஸ் நாட்டில் உள்ள நான்டெஸ் சென்ற பகுதியில் ஒரு ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. இங்கு டேவிட் என்பவர் செல்போனில் பேசும்போது ஸ்பீக்கர் ஆன் செய்து வைத்து பேசியுள்ளார். அதாவது அவர் ரயில்வே ஸ்டேஷனில் வைத்து தன்னுடைய சகோதரியுடன் செல்போனில் ஸ்பீக்கர் ஆன் செய்து வைத்து பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது ரயில்வே அதிகாரி ஒருவர் அங்கு வந்து ஸ்பீக்கரை அணைத்துவிட்டு பேச வேண்டும் என்றும் இப்படி தொடர்ந்து பேசினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதனை டேவிட் நகைச்சுவையாக கூறுகிறார் என்று நினைத்து பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவர் தொடர்ந்து ஸ்பீக்கர் ஆன் செய்து பேசியதால் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இந்திய மதிப்பின்படி அவருக்கு 16 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.