
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. இவர் பாடகர் நிக் ஜோன்சை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது ஒரு பெண் குழந்தை இருக்கிறது. தற்போது பிரியங்கா சோப்ராவுக்கு ஹாலிவுட்டில் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் பிரியங்கா சோப்ராவின் சிட்டாடல் வெப் சீரிஸ் படப்பிடிப்பில் தனக்கு ஏற்பட்ட விபத்துகள், ரத்த காயங்கள் குறித்த தகவலை ஆதாரத்துடன் பகிர்ந்துள்ளார்.

அதன் காட்சியில் பிரியங்கா மூக்கில் ரத்தம், கண் புருவத்தில் ரத்தம் என பல இடங்களில் காயங்கள் உடன் இருக்கிறார். தொடர்ந்து, ‘நீங்கள் கவர்ச்சியாக இருக்கிறீர்கள் என்பதற்கு பதில் உங்கள் வேலை கவர்ச்சியாக இருக்கிறது என சொல்லுங்கள்’ என்று கேட்டுக் கொண்டுள்ளார்.