
சமீபகாலமாகவே தெருநாய்கள் குழந்தைகளை கடிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. நாய்களை குறைக்க அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்தாலும் இன்னும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது. அந்தவகையில் கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் பகுதியைச் சேர்ந்த கீரலிங்கா, தனது மனைவி மற்றும் 4 வயது மகள் லாவன்யாவுடன் வசித்துவந்தார்.
15 தினங்களுக்கு முன் லாவன்யா சாலையில் விளையாடிக் கொண்டிருந்தபோது அவரை தெருநாய்கள் துரத்தித் துரத்திக் கடித்திருக்கின்றன. இதனால், படுகாயமடைந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால், அது பலனளிக்காமல் நேற்று உயிரிழந்தார்.