நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தேவராயபுரம் பகுதியில் பகவதி (20) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர். இவர் பேருந்து நிலையம் எதிரே உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று முன்தினம் இரவு சிக்கன் பிரியாணி சாப்பிட்டுள்ளார். அதன் பிறகு அவர் 7 பொட்டலங்களில் சிக்கன் ரைஸ் வாங்கிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதை அவர் தன்னுடைய தாய் நதியா, தாத்தா சண்முகம், பாட்டி பார்வதி, தம்பி கௌசிக் ஆதி, சித்தி பிரேமா மற்றும் அவருடைய இரு குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார்.

இதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் நதியா மற்றும் சண்முகத்திற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர்களை உடனடியாக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சண்முகம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இருந்தார்‌. இந்நிலையில் சிக்கன் ரைஸில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்தது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட ஹோட்டல் மற்றும் பகவதியிடம் விசாரணை நடத்தினர். அப்போது பகவதி சிக்கன் ரைஸில் பூச்சி மருந்து கலந்து கொடுத்ததை ஒப்புக்கொண்டார். அதாவது பகவதிக்கு கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனை அவருடைய தாத்தா சண்முகம் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் தன்னுடைய தாத்தாவை கொலை செய்ய பகவதி முடிவு செய்து சிக்கன் ரைஸ்சில் பூச்சி மருந்து கலந்து கொடுத்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து பகவதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.