
ஜார்கண்ட் மாநிலம் கத்கர் பகுதியில் உள்ள பெண்டா வாலி கலி மக்பரா பகுதியில் வசிக்கும் ஹன்ஸ்லா என்ற இளைஞர் செவ்வாய்க்கிழமை ஒரு முக்கியமான வேலைக்காக தனது பைக்கில் புறப்பட்டார். பச்பேடா மொஹல்லா பகுதியில் உள்ள சக்கு வாலி மசூதி அருகே சென்றபோது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் பைக்கில் இருந்து கீழே விழுந்தார். அச்சமயத்தில் அவர் பைக்கை கட்டுப்படுத்த முயன்றபோது அருகில் இருந்த மின் கம்பத்தில் சிக்கி வலியால் துடிக்க ஆரம்பித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த காட்சியை பார்த்த வழிப்போக்கர்கள் உடனடியாக ஓடி வந்து, ஹன்ஸ்லாவை கீழே இறக்கி CPR அளித்து உயிரைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால், மரணத்துடன் போராடிய ஹன்ஸ்லா, சிகிச்சைக்கு முன்பே உயிரிழந்தார். உடனடியாக அவரது உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததும், அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவர்கள் அவரை பரிசோதித்தபோது, அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
एक और युवक की हार्ट अटैक से मौत! बाइक पर जा रहे युवक को आया हार्ट अटैक! लोगों ने CPR देकर जान बचाने की कोशिश! युवक की मौत! CCTV कैमरे में कैद हुई घटना! मामला यूपी के मुरादाबाद का!#UttarPradeshnews #moradabadnews #heartattack #livedeath pic.twitter.com/3FslczQw3x
— Arun Kumar (@ArunKum96527953) April 23, 2025
இந்த வீடியோ இன்று சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. ஹன்ஸ்லா வலியால் துடிக்கும் காட்சியும், பொதுமக்கள் உதவியுடன் அவரை காப்பாற்ற முயற்சிக்கும் வீடியோவும் பலரின் கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளது. இளம் வயதில் ஒரு இளைஞர் பைக் ஓட்டிச் செல்வதற்கிடையே திடீரென மாரடைப்பால் உயிரிழந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.