
மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி அருகே எம் கல்லுப்பட்டி என்ற பகுதி உள்ளது. இங்கு இன்பராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இந்திய ராணுவ வீரர். இவர் அசாமில் உள்ள நிஹாம்பள்ளி முகாமில் பணியாற்றி வந்தார். இவர் நேற்று மதியம் முகாமிற்கு உணவு எடுத்துச் சென்றுள்ளார். அப்போது அவர் சென்ற ராணுவ வாகனம் திடீரென பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இன்பராஜ் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில் அவருடன் சென்ற மற்றொரு ராணுவ வீரர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதில் இன்பராஜிற்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பாக தான் திருமணம் ஆனது. இவருக்கு ஐஸ்வர்யா என்ற பெண்ணுடன் திருமணம் ஆன நிலையில் ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் தற்போது விபத்தில் உயிரிழந்துவிட்டார். மேலும் இவருடைய உடலுக்கு ராணுவ முகாமில் மரியாதை செலுத்திய நிலையில் சொந்த ஊருக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.