மலையாள சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் பாசில். இவர் தமிழிலும் ஒரு சில படங்களை இயக்கியுள்ளார். இவருடைய மகன் என்று அடையாளத்துடன் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் பகத் பாசில். இருப்பினும் தன்னுடைய நடிப்புத் திறமையின் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே பகத் பாசில் திரட்டியுள்ளார். இவர் பிரபல நடிகை நஸ்ரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர் மலையாள சினிமா மட்டும் இன்றி தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் பகத் பாசில் சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் தனக்கு அரியவகை நோய் பாதிப்பு இருப்பதாக கூறியுள்ளார். அதாவது ADHD என்று அழைக்கப்படும் கவன குறைபாடு நோய் இருக்கிறது. இது ஒரு நரம்பியல் சம்பந்தமான நோய் ஆகும். இந்த நோய் பாதிப்பு இருப்பவர்களுக்கு மறதி பிரச்சனை ஏற்படும். மேலும் பகத் பாஸில் இப்படி ஒரு நோயால் பாதிக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.