
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் வருடம் வெளிவந்த திரைப்படம் மார்க் ஆண்டனி. இந்த படம் மாபெரும் அளவில் வெற்றி அடைந்தது. இதனை தொடர்ந்து அவர் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் அஜித்தின் குட் பேட் அக்லி. படத்தின் டீசர் கடந்த 28 ஆம் தேதி வெளியாகிய நிலையில் 24 மணி நேரம் ஆவதற்குள் 25 மில்லியன் பார்வையாளர்களை பெற்று மாபெரும் சாதனை படைத்தது.
இந்த படத்தின் டீசரை திரையரங்கில் ஒளிபரப்பு செய்து ரசிகர்கள் கொண்டாடினார்கள். இந்த கொண்டாட்டத்தில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் கலந்து கொண்டார். இதனையடுத்து அஜித் ரசிகர்கள் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு பரிசாக கொடுக்க இரண்டு பவுன் தங்க மோதிரத்தை வைத்துள்ளார்கள். பட ரிலீஸ் அன்று இந்த மோதிரத்தை அவருக்கு வழங்குவார்கள் என்று கூறப்படுகிறது.