அஜித்தை வைத்து வாலி, வில்லன், சிட்டிசன், வரலாறு உட்பட பல படங்களை தயாரித்த நிக் ஆர்ட்ஸ் நிறுவன தயாரிப்பாளர் எஸ்.எஸ்.சக்ரவர்த்தி உயிரிழந்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு தமிழ் திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் அஜித்தை வைத்து 9 படங்களையும், விக்ரம், சிம்புவை வைத்தும் படங்களை தயாரித்துள்ளார்.