
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பிரபாஸ். இவர் பாகுபலி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இவர் நடிப்பில் சமீபத்தில் சலார் திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சலார் 2 உருவாகி வருகிறது. இதே போன்று ப்ராஜெக்ட் கே உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். நடிகர் பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த கல்கி திரைப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது.
இந்த படத்தில் தீபிகா படுகோனே, திஷா பதானி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படம் ஜனவரி 3ஆம் தேதி ஜப்பானில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் தற்போது பிரபாஸ் கலந்து கொள்ளவில்லை. அதாவது படப்பிடிப்பு சமயத்தில் கணுக்காலில் காயம் ஏற்பட்டு சுளுக்கு பிடித்துள்ளது. இதன் காரணமாகத்தான் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை என்று பிரபாஸ் கூறியுள்ளார். மேலும் இதனால் விரைவில் பிரபாஸ் நலமடைய வேண்டுமென்று அவருடைய ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள்.