உலக சுற்றுச்சூழல் நாள் விழிப்புணர்வை முன்னிட்டு கர்நாடகா சட்டசபை வளாகத்திற்கு துணை முதல்வர் டி.கே சிவகுமார் சைக்கிளில் வருகை புரிந்தார். அவர் வளாகத்தை அடைந்ததும் சைக்கிளை நிறுத்த முயன்ற போது திடீரென எதிர்பாராத விதமாக நிலைத்தடுமாறி கீழே விழுந்துவிட்டார். உடனடியாக அங்கிருந்த காவலர்கள் அவரை கைத்தாங்களாக தூக்கிவிட்டனர்.

இன்று காலை நடைபெற்ற சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் நடைபயணத்தை தொடங்கி வைத்த கர்நாடக துணை முதல்வர் அதன் பிறகு சைக்கிளில் சட்டசபை வளாகத்திற்கு சென்றபோதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.