இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அரசு சார்ந்த அனைத்து சேவைகளிலும் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஐடிஆர் மற்றும் பான் கார்டு விண்ணப்பத்தில் ஆதாருக்கு பதிலாக ஆதார் பதிவு எண் ஏற்றுக்கொள்ளப்படாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. வருகின்ற அக்டோபர் 1 முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரவுள்ளது. ஆதார் பதிவு எண்ணை பயன்படுத்தி முறைகேடுகள் நடைபெறுவதை தவிர்க்கும் விதமாக மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆதாருக்கு விண்ணப்பிக்கும் போது 28 இலக்கம் கொண்ட ஆதார் பதிவு எண் வழங்கப்படும்.