இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. அதிலும் சில வீடியோக்கள் மிகவும் அதிர்ச்சிகரமானதாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது ஒருவர் குடி போதையில் பைக்கில் தன் மனைவி மற்றும் மகனுடன் செல்லும் திடீரென வாகனங்களுக்கு இடையில் செல்லும் போது அந்த பெண் பின்னால் இருந்து தடுமாறி கீழே குதித்து விட்டார். அவர் கீழே விழவில்லை. ஆனால் போதையில் இருந்த அந்த கணவன் தன் மனைவி கீழே இறங்கியது கூட தெரியாமல் மகனுடன் பைக்கில் சென்றார். பின்னால் வந்தவர்கள் அவரை அழைத்தும் கவனிக்கவில்லை. பின்னர் ஒருவர் விரட்டி சென்று அவரின் கைகளை தொட்டு மனைவி கீழே இறங்கியதை கூறிய பிறகுதான் பைக்கை நிறுத்தினார்.

 

இந்நிலையில் அவர் குடி போதையில் இருந்த நிலையில் அவரால் மற்றவர்கள் சொன்னதை உணர முடியாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியது தவறு எனவும் அந்த நபர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் அவர் குடிபோதையில் குழந்தை மற்றும் பெண்ணுடன் பைக்கில் சென்ற நிலையில் ஏதாவது விபரீதமாக நடக்க வாய்ப்பு உள்ளது என்பதால் கண்டிப்பாக இதுபோன்ற சம்பவங்களில் உரிய நடவடிக்கை தேவை என்பதே பலரது கருத்தாகவும் இருக்கிறது.