பொதுத்துறை வகையான பஞ்சாப் நேஷனல் வங்கி ஒரு புதுவிதமான கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுவாக கிரெடிட் கார்டை பயன்படுத்துபவர்களுக்கு வங்கி கடன் வழங்கும். இந்தக் கடனை குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் வாடிக்கையாளர்கள் வங்கியில் திருப்பி செலுத்த வேண்டும். ஆனால் தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கி அறிமுகப்படுத்தியுள்ள கிரெடிட் கார்டு பிக்சட் டெபாசிட் கணக்குகளை அடிப்படையாக வைத்து வழங்கப்பட்டுள்ளது. அதாவது பிக்சட் டெபாசிட் தொகையில் 80 சதவீதம் வரை வாடிக்கையாளர்கள் கடனாக பெற்றுக் கொள்ளலாம். பிக்சட் டெபாசிட் தொகையில் 80 சதவீதம் வரை வங்கியால் கடன் வழங்கப்படும்.

இதுவரை எந்த வங்கியிலும் இப்படி ஒரு கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தியது இல்லை. ரூபே மற்றும் விசா அடிப்படையிலான கிரெடிட் கார்டுகளை வங்கி வழங்குகிறது. இந்த கிரெடிட் கார்டுக்கு ரிவார்ட் உள்ளிட்ட வழக்கமான சலுகைகள் வழங்கப்படும் நிலையில், இந்த கார்டை  பெறுவதற்கு வங்கிகளுக்கு நேரில் சென்று அழைய வேண்டிய அவசியம் இல்லை. இதில் ரூபே கிரெடிட் கார்டில் இன்சூரன்ஸ் கவரேஜ் மற்றும் யுபிஐ உடன் இணைத்துக் கொள்ளும் வசதிகள் கிடைக்கிறது. மேலும் இந்த கிரெடிட் கார்டை வாங்குவதற்கு கட்டணம் வசூலிக்கப்படாததோடு  டிஜிட்டல் முறையில் உடனடியாக கார்டும்  கொடுக்கப்படும்.