ஐபிஎல் தொடரில்  நடப்பு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்ட நிலையில் அவர் சிறப்பான முறையில் விளையாடவில்லை என பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அந்த வகையில் ஏபிடி வில்லியர்ஸ் தோனி போன்று  அமைதியாக செயல்பட வேண்டும் என்ற ஈகோவுடன் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஷிப் இருந்தது. ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஷிப் குஜராத் அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு வேண்டுமானால் செட் ஆகலாம். ஆனால் ரோகித் சர்மா மற்றும் பும்ரா போன்ற சீனியர் வீரர்கள் இருக்கும் மும்பை அணியில் எடுபடாது என்று கூறியிருந்தார். இதற்கு தற்போது கம்பீர் பதிலடி கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஷிப்பை பற்றி குறை சொல்வதற்கு முன்பாக கெவின் பீட்டர்சன் மற்றும் ஏபிடி வில்லியர்ஸ் போன்றவர்கள் கேப்டனாக இருந்த போது என்ன சாதித்தார்கள் என்பதை முதலில் பார்க்க வேண்டும். தலைமை பற்றிய அவர்களுடைய புள்ளி விவரங்களை எடுத்து பார்த்தால் ஒன்றுமே இருக்காது. அவர்கள் சொந்த சாதனையை மட்டும் தான் செய்துள்ளார்களே தவிர அணிக்காக எதுவும் செய்யவில்லை. ஹர்திக் பாண்டியாவுக்கு இன்னும் கொஞ்சம் டைம் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு போட்டி முடிந்த பிறகு அவருடைய செயல்பாடுகளைப் பற்றி விமர்சிப்பது சரி கிடையாது. எனவே அவருடைய தலைமை பற்றி பேசும் வல்லுநர்கள் முதலில் தாங்கள் என்ன சாதித்தார்கள் என்பது குறித்து யோசிக்க வேண்டும். மேலும் நடப்பு தொடரில் மும்பை இந்தியன்ஸ் சிறப்பாக செயல்படாததால் இப்படி பேசுகிறார்கள் என்று கூறியுள்ளார்.