தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியான தி கோட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தை தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் கேவிஎன் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் விஜய் தளபதி 69 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் அனிமல் பட நடிகர் பாபிதியோல், மமீதா பைஜூ, பிரியாமணி, நரேன் மற்றும் நடிகை பூஜா ஹெக்டே ஆகியோர் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இந்த பூஜையில் இயக்குனர் வினோத், நடிகை பூஜா ஹெக்டே உள்ளிட்ட படகுழுவினர் கலந்து கொண்ட நிலையில் சிறப்பான முறையில் பூஜை நடைபெற்றது. அதே சமயத்தில் இன்று நடிகர் விஜயின் முதல் மாநாட்டுக்கான பந்தல்கால் நடும் விழாவும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் விஜயின் கடைசி படம் விவசாய பின்னணியில் உருவாகும் அரசியல் கதையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் நடிகர் விஜய்யின் கடைசி படம் இது என்பதால் எதிர்பார்ப்பு மிகுந்த அளவில் இருக்கிறது.

அதன் பிறகு நடிகர் விஜய் இந்த பூஜையில் வேஷ்டி சட்டையுடன் கலந்து கொண்டார். பொதுவாகவே நார்மலான உடையில் கலந்து கொள்ளும் நடிகர் விஜய் தற்போது கடைசி படத்தில் வேஷ்டி சட்டையுடன் நெற்றியில் பொட்டு வைத்தபடி பூஜையில் கலந்து கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. தன்னுடைய x பக்கத்தில் நெற்றியில் பொட்டு வைத்த புகைப்படத்தை நீக்கியது சர்ச்சையாக மாறிய நிலையில் தற்போது பட பூஜையில் விஜய் பொட்டு வைத்தபடி கலந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.