
தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக அதிமுக எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரன் மற்றும் முன்னாள் எம்எல்ஏ நீதிபதி ஆகியோரது வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். இதற்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் அதற்கு முன்பாக டாஸ்மாக் தலைமை அலுவலகர் சம்பந்தப்பட்ட இடங்கள் உட்பட பல பகுதிகளில் அமலாக்க துறையினர் சோதனை நடத்தினர். மேலும் இது தொடர்பாக நேற்று எடப்பாடி பழனிச்சாமி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,
2-வது நாளாக தொடரும் ED ரெய்டுகள்! -இன்னும் இந்த ரெய்டுகள் பற்றி முதல்வர் ஸ்டாலின் மவுனமாக இருப்பது ஏன்? -தன் குடும்பத்தைச் சார்ந்தவர் வீட்டிலும், தனக்கு நெருக்கமானவர் வீட்டிலும் நடக்கும் இந்த ரெய்டு பற்றி ஏன் பேச மறுக்கிறார்? -ரத்தீஷ் எங்கே இருக்கிறார்? துபாய் சென்றுவிட்டதாக வரும் செய்திகள் உண்மையா? அப்படியென்றால், ரெய்டு வருமோ என்ற அச்சத்தில் தலைமறைவானாரா ரத்தீஷ்? -முதல்வராலும், அவரது மகனாலும் “தம்பி” என்று அன்போடு அழைக்கப்படும் ரத்தீஷின் “Job Description” என்ன? #யார்_அந்த_SIR என்று கேட்டோம்- பதில் வரவில்லை. #யார்_அந்த_தியாகி என்று கேட்டோம்… தமிழ்நாட்டிற்கே தெரிந்த பதில் என்றாலும் திரு. ஸ்டாலின் வாய் திறக்கவில்லை.
இப்போது கேட்கிறோம்- #யார்_அந்த_தம்பி? எப்படி வந்தது இந்த தம்பிக்கு இவ்வளவு அதிகாரம்?இந்த தம்பி கைதாகும் போது, தம்பியின் வசம் உள்ள திமுக-வின் குடுமி சிக்கும்! அப்போது பேசித் தானே ஆக வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.