ஈரோடு மாவட்டம் சென்னிமலை இங்கூர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி. இவர் அந்த பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். சம்பவம் நடந்த அன்று தனலட்சுமியின் தாய் அருக்காணி(60) கடையில் இருந்தார். அப்போது ஒரு வாலிபரும் பெண்ணும் ஸ்கூட்டரில் கடைக்கு வந்தனர்.

அப்போது கடைக்குள் சென்ற வாலிபர் பீரோ வாங்க வேண்டும் என கூறியுள்ளார். இதனை நம்பிய அருக்காணி அங்கிருந்த பீரோக்களை காட்டி விலையை கூறிக் கொண்டிருந்தபோதே அந்த வாலிபர் அருக்காணி அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலி பறித்து விட்டு அந்த பெண்ணுடன் தப்பி சென்றார்.

இதுகுறித்த அருக்காணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில்போலீசார் நடத்திய விசாரணையில், நாமக்கல் பாளையம் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வியும், ரமேஷ் என்பவரும் இணைந்து தங்க சங்கிலியை பறித்து சென்றது தெரியவந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சி மகளிர் அணி செயலாளராக இருந்த தமிழ் செல்விக்கு ரமேஷுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் அருக்காணி தனியாக இருப்பதை நோட்டமிட்டு நகையை பறித்தது உறுதியானது. அவர்களிடம் இருந்த தங்க நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் தமிழ்ச்செல்வி ரமேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்