பாகிஸ்தானில் ஒரு பிரபல செய்தி ஊடகத்தில் செய்தியாளராக பணியாற்றும் பெண், சமீபத்தில் வழங்கிய நியூஸ் தொகுப்பு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. அதாவது  பாகிஸ்தானின் பொருளாதாரம் 411 பில்லியன் அமெரிக்க டாலராக வளர்ந்துள்ளதாகவும், இது உலகில் 40வது பெரிய பொருளாதாரம் என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் அதைவிட அதிர்ச்சியளித்தது, அமைப்புசேராத துறைகளின் வருமானம் சேர்க்கப்பட்டால் பாகிஸ்தான் பொருளாதாரம் 1 டிரில்லியன் டாலரைக் கடந்து விடும் என கூறியதுதான்.

அதோடு, மக்கள் அனைவரும் வரி செலுத்த வேண்டும் என உணர்ச்சிவயப்பட்டு பேசிய அந்த செய்தியாளர், தனது பேச்சு முறை, இடைவேளைகள் மற்றும் விசித்திர உச்சரிப்பால் பார்வையாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தினார். அவரது பேச்சு, உண்மையான செய்தி வாசிப்பு போல இல்லாமல், நாடகத் தோற்றத்தில் இருந்ததால், அது உடனடியாக இணையத்தில் மீம்களாக மாறி பரவத் தொடங்கியது. பலர், இது உண்மையிலேயே செய்தி வாசிப்பா என்ற  சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.

 

இணையத்தில் இதற்காக நெட்டிசன்கள் பல விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். “இவர் மது குடித்து பேசுறாரா?”, “ஏன் இவ்வளவு நெசமா ஆக்டிங்?” என கேள்வி எழுப்பியுள்ளனர். மற்றொருவர், “இவங்க informal-ஆ பேசினா தான் GDP 1 டிரில்லியன் ஆகுமா?” என நக்கலாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான் ஊடகங்கள் தகவலுக்கு பதிலாக நாடகமயம் செய்யப்பட்ட செய்திகளால் தான் உலக கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த செய்தி வாசிப்பாளர் பேசும்போதே சிரித்துக் கொண்டே பேசுவது போல் இருப்பதால் உண்மையில் இது செய்தி வாசிக்கும்போது நடந்த சம்பவமா இல்லையெனில் நகைச்சுவையாக எடுத்த வீடியோவா என்பது சரிவர தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.