குவைத்தில் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களுடைய எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது குறிப்பிட த்தக்கது.

இந்நிலையி உயிரிழந்த தமிழர்கள் 7 பேரின் உடல்கள் நாளை இந்தியாவிற்கு கொண்டு வரப்படுகிறது. விமானம் மூலமாக  நாளை காலை 9.30 மணியளவில் கொச்சி விமான நிலையத்திற்கு 7 பேரின் உடல்களும் கொண்டு வரப்பட உள்ளதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. உயிரிழந்த தமிழர்களின் உடல்களை, அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் பணியை மேற்கொள்வதற்காக அமைச்சர் செஞ்சி மஸ்தான் நாளை கொச்சி செல்ல இருக்கிறார் என்று கூறப்படுகிறது.