
மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் அஹானா கிருஷ்ணன். வளர்ந்து வரும் நடிகையான இவர் மலையாளத் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு தியா கிருஷ்ணன் என்ற தங்கை இருக்கும் நிலையில் அவர் ஒரு இன்ஸ்டா பிரபலம். இதில் தியா கிருஷ்ணன் ஒரு கவரிங் கடை வைத்துள்ள நிலையில் அவரிடம் வேலை பார்க்கும் மூன்று பெண்கள் தியாவுக்கு தெரியாமல் திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.
அதாவது கடையில் உள்ள க்யூ ஆர் கோட் ஸ்கேனை தங்களுடைய சொந்த வங்கியின் க்யூ ஆர் கோடு ஸ்கேனாக மாற்றி இவர்கள் திருட்டில் ஈடுபட்ட நிலையில், அஹானா அந்த மூன்று பெண்களையும் அமர வைத்து திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொள்ள வைத்து அதனை வீடியோவாக பதிவு செய்து youtube-ல் போட்டுள்ளார்.
அவர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் திருடிய பணத்தை கொடுப்பதாக கூறுகிறார்கள். இந்நிலையில் சில நாட்களுக்கு பிறகு தியாவின் குடும்பத்தினர் மீது அந்த பெண்கள் குற்றம் சாட்டிய நிலையில் தற்போது உண்மையை கொண்டு வருவதற்காக தான் இந்த வீடியோ எடுப்பதாக அஹானா கூறியுள்ளார்.
மேலும் இந்த வீடியோவின் மூலம் தன் குடும்பத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள கலங்கத்தை அவர் துடைத்ததாக கூறியுள்ளார்.