
தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே கௌமாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டம் மற்றும் மங்களதேவி கண்ணகி கோயிலில் சித்திரை முழு நிலவு திருவிழா நடைபெறுகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு மே 9-ஆம் தேதி மற்றும் 12-ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதே போல கரூரில் மகா மாரியம்மன் கோவில் கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு 28-ஆம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனை ஈடு செய்யும் வகையில் ஜூன் மாதம் 14-ஆம் தேதி அரசு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.