
திருப்பூர் மாவட்டத்திற்கு நேற்று இரவு ஒடிசாவில் இருந்து ஒரு கணவன் மனைவி ரயில் மூலம் வந்தனர். இவர்கள் பனியன் நிறுவனங்களில் வேலை தேடி வந்த நிலையில் இரவு நேரம் என்பதால் எங்கு செல்வது என்று தெரியாமல் ரயில்வே நிலையத்தில் நின்றனர். அப்போது அங்கு சில வாலிபர்கள் வந்த நிலையில் நாங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக அந்த தம்பதியிடம் கூறி அங்கிருந்து அழைத்து சென்றனர். அதாவது பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது முர்ஷித் (19), முகமது டேனிஷ் (25), முகமது நதீம் (24) ஆகியோர் லட்சுமி நகர் பகுதிக்கு அவர்களை அழைத்துச் சென்றனர்.
பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத நேரம் பார்த்து கத்தியை காட்டி அவர்களை மிரட்டி அந்த கணவன் கண்முன்னே மனைவியை மூன்று பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பெண்ணை பலாத்காரம் செய்த மூன்று வாலிபர்களையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.