
டிஎன்பிஎஸ்சி அரசு பணிகளுக்கான காலி பணியிடங்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது தொழில்நுட்ப பணி தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் 20 பணிகளுக்கு கீழ் 118 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மேலாளர், உதவி மேலாளர், உதவி பொது மேலாளர், துணை மேலாளர் கணக்கு அலுவலர், உதவி இயக்குனர், முதுநிலை அலுவலர் நிதியாளர் உட்பட 20 வகையான பணிகளுக்கு கீழ் 118 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
ஒவ்வொரு வேலை வாய்ப்பிற்கும் தகுந்தது போல் வயது வரம்புகள் மாறுபடும். குறைந்தபட்சம் 21 வயது நிரம்பியவர்கள் இதில் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க https://apply.tnpscexams.in/apply-now?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 14. 6.2024 கடைசி தேதி ஆகும். டிகிரி அல்லது பொறியியல் படித்தவர்கள் இதில் விண்ணப்பிக்கலாம்.