தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது எச். வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கும் நிலையில், பாபி தியோல், பிரியாமணி, கௌதம் வாசுதேவ் மேனன், மமிதா பைஜூ உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கும் நிலையில் கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் ஜனநாயகன் நடிகர் விஜயின் கடைசி திரைப்படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த திரைப்படம் அரசியல் திரைப்படம் ஆக இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் இன்று நள்ளிரவு 12 மணி  அளவில் நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படத்தின் கிளிம்ஸ் வீடியோவை பட குழு வெளியிட்டனர்.

இந்த அறிவிப்புக்காக அஸ்தமிக்கும் சூரியன் புகைப்படத்துடன் நடிகர் விஜய் இருப்பது போன்று போஸ்டரை பட குழு முன்பு வெளியிட்டது. மேலும் தற்போது ஜனநாயகன்படத்தின் First Rore வெளியாகியுள்ள நிலையில் என் நெஞ்சில் குடியிருக்கும் என்ற வசனத்துடன் ஆரம்பிக்கும் அந்த வீடியோவில் நடிகர் விஜய் போலீஸாக மிரட்டுகிறார். மேலும் ரத்தம் தெறிக்க தெறிக்க வெளியாகியுள்ள இந்த வீடியோ வெளியான 15 நிமிடங்களில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.