
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை மேற்கொண்டு தீவிரவாத முகாம்களை குறி வைத்து தகர்த்தது.
இந்த தாக்குதலில் 100 தீவிரவாதிகள் உயிரிழந்ததாக அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த தாக்குதலில் 100 தீவிரவாதிகள் உயிரிழந்ததாக அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருந்த நிலையில் தற்போது தாக்குதலில் உயிரிழந்தவர்கள் யார் என்பதற்கான புகைப்படத்தை வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார்.
அந்த புகைப்படத்தில் உயிரிழந்த தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் மரியாதையுடன் இறுதி சடங்கு செய்தது காணப்படுகிறது.
இந்த தாக்குதலில் 3 பயங்கரவாத அமைப்புகள் குறிவைக்கப்பட்ட நிலையில் இறந்தவர்கள் யார் என்பதற்கான ஆதாரத்தை விக்ரம் மிஸ்ரி புகைப்படம் வாயிலாக காண்பித்துள்ளார். மேலும் இந்த தாக்குதலில் தீவிரவாதிகள் மட்டும் தான் கொல்லப்பட்டதாகவும் அப்பாவி பொதுமக்கள் மற்றும் மத வழிபாட்டு தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை எனவும் இது பற்றி பாகிஸ்தான் கூறுவது முற்றிலும் பொய் என்றும் கூறியுள்ளார்.