கர்நாடக மாநிலம் ஹூப்ளி மாவட்டத்தில் 6 மற்றும் 8-ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்கள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர். இருவரும் ஒரே பள்ளியில் படிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 6-ஆம் வகுப்பு மாணவன் ஐந்து ரூபாய்க்கு நொறுக்கு தீனி வாங்கி சாப்பிட்டு கொண்டிருந்தார்.

அந்த தின்பண்டத்தை பகிர்வது தொடர்பாக இரண்டு மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த 6-ஆம் வகுப்பு மாணவன் கத்தியால் 8-ஆம் வகுப்பு மாணவனை சரமாரியாக குத்தினான்.

இதில் படுகாயமடைந்த 8-ஆம் வகுப்பு மாணவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவன் உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் 6-ஆம் வகுப்பு மாணவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அழைத்துச் செல்ல முயன்றனர்.

அப்போது ஆறாம் வகுப்பு மாணவன் நான் உங்களுடன் வரமாட்டேன். அம்மாவை விட்டுவிட்டு வரமாட்டேன் என கெஞ்சியுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.