காசா- இஸ்ரேல் தாக்குதலில் காசா பகுதிகளில் 52 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் அப்பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லாமல் பெண்கள், குழந்தைகள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். மேலும் அந்த தாக்குதல்களில் ஒரு லட்சத்து 13 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இருப்பினும் இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினர் மக்கள் அதிகம் உள்ள இடங்களிலே செயல்படுகின்றனர். அதனால் தான் பொதுமக்களின் உயிரிழப்புகள் ஏற்படுகிறது என தெரிவித்துள்ளது. இதனிடையே இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகூ, ஈரான் மீது நடத்தப்பட்ட போர் நடவடிக்கையால் பணய கைதிகள் அழைத்து வரும் சாத்தியம் அதிகரித்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பணய கைதிகளின் உறவினர்கள் போரை நிறுத்தும்படி வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து முடிவுக்கு கொண்டு வர விரிவான ஒப்பந்தம் ஒன்றை இஸ்ரேல் நடத்தியது. அதில் 50 பணய கைதிகளையும் அழைத்து கொண்டு வந்த பின் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்கா ஆதரவால் காசா பகுதிக்குள் நிவாரண உதவிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோ ஒன்று வெள்ளை மாளிகை ஊடக செய்தி தொடர்பாளர் கரோலின் லிவிட் தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் பாலஸ்தீனிய மக்கள் டிரம்பை நாங்கள் நேசிக்கிறோம், டொனால்டை நாங்கள் நேசிக்கிறோம் என கோஷங்கள் எழுப்புவதை காண முடிகிறது. அதேபோன்று ட்ரம்ப் வெளியிட்ட பதிவு ஒன்றை லிவிட் பகிர்ந்து இருந்தார். அந்த பதிவில் பழைய கைதிகளை மீட்டு கொண்டு வருவோம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.