புதுக்கோட்டை மாவட்டம் வேவலாணி கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யராஜ். இவர் தனது குழந்தைக்கு முதல் பிறந்தநாள் விழா நடத்தியுள்ளார். பிறந்த நாளில் கலந்து கொண்ட உறவினர்களும் நண்பர்களும் கேக் மற்றும் அசைவ உணவு சாப்பிட்டனர்.

அன்று இரவு அதே கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா(60) என்பவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கருப்பையா உயிரிழந்தார்.

மேலும்  பிறந்தநாள் விழாவில் சாப்பிட்ட மஞ்சுளா, சின்ன பொண்ணு, அஞ்சலிதேவி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டவருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து அறிந்த அறந்தாங்கி கோட்டாட்சியர் சிவக்குமார், ஆவுடையார் கோவில் வட்டாட்சியர் சிகிச்சை பெறுபவர்களிடம் விவரம் கேட்டறிந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.