அதிமுக கட்சியின் வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி தற்போது உடல் நலக்குறைவினால் காலமானார். இவருக்கு இன்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். மேலும் அமுல் கந்தசாமியின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதிமுக கட்சியின் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.