
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் என் எஸ் ஓ நகரச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவருக்கும் கன்னித்தோப்பைச் சேர்ந்த ரமேஷ் மனைவி ரேவதி என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தைகளை பிரிந்து கார்த்திக்குடன் தனியாக வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் கார்த்திக் ரேவதியுடன் பழகுவதை தவிர்த்து வீட்டிற்கு வருவதையும் நிறுத்தினார். இதனால் கோபமடைந்த ரேவதி கார்த்திக் எங்கு செல்கிறாரோ அங்கெல்லாம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் உறவினர்கள் கார்த்திக்கை திருப்பூருக்கு வேலைக்கு அனுப்பி வைத்தனர். அவர் இருக்கும் இடம் தெரியாமல் ரேவதி கார்த்திக்கின் அண்ணன் அன்பரசன் வீட்டிற்கு சென்று எங்களை நீங்கள்தான் பிரித்தீர்கள். கார்த்திக் எங்கே இருக்கிறார்? அவரது முகவரியை கொடுங்கள் என தகராறு செய்துள்ளார்.
ஆனால் அன்பரசன் முகவரியை கொடுக்கவில்லை. இதனால் நள்ளிரவு நேரம் ரேவதி அன்பரசன் வீட்டு வாசலில் நின்ற மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ரேவதியை கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.