
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியில் அஜித்குமார் என்ற இளைஞர் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த இளைஞரை தனிப்படை போலீசார் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து 5 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களை கைது செய்துள்ளனர். இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைத்து வந்த நிலையில் இந்த விவகாரத்திற்கு தமிழ்நாடு அரசே முழு பொறுப்பு என்று கடும் அதிருப்தி தெரிவித்தது.
இந்நிலையில் சிவகங்கை மாவட்ட எஸ்பி ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலையில் தற்போது மானாமதுரை டி.எஸ்.பி சண்முகத்தை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் முன்னதாக இந்த விவகாரத்தில் டிஎஸ்பிஐ சஸ்பெண்ட் செய்யாதது ஏன் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கதாகும்