இன்றைய ( 20.08.2019 ) ராசிப்பலன் …!!

நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம் , ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம்.

மேஷம் :

இன்று உங்களுக்கு வரவை மீறிய செலவு உண்டாகும். குழந்தைகளின் படிப்பில் ஆர்வமின்மை காணப்படும். உறவினர்களால் மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். சிந்தித்து செயல்படுவீர்கள் என்றால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்களின் கடன்கள் ஓரளவுக்கு குறையும்.

ரிஷபம் :

தொழில் தொடர்பாக புதிய முயற்சி மேற்கொள்ள நல்ல நாள் . குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகி அமைதி நிலவும். திருமண பேச்சுவார்த்தைளால் சுப செய்தி வந்து சேரும். பிள்ளைகளினால் மகிழ்ச்சியான சம்பவம் நடைபெறும். புதிய பொருட்கள் மட்டுமில்லாமல் வீடும் வந்து சேரும்.

மிதுனம் :

இன்று உங்களின் வீட்டில் மங்களகரமான நிகழ்வுகள் ஏற்படும். பிள்ளைகளோடு நீடித்து வந்த  கருத்து வேறுபாடுகள் தீரும். தொழில் முன்னேற்றத்திற்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை தேடி தரும்.வெளி வட்டார நட்புகளால் நற்பலன் ஏற்படும். அரசின் மூலமாக எதிர்பார்த்திருந்த உதவிகள் எளிதாக கிடைக்கும். உங்களின் வருமானம் அதிகரிக்கும்.

கடகம் :

இன்று வியாபார ரீதியிலாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் போது ஒருமுறைக்கு பலமுறை யோசித்து , சிந்தித்து , கவனமுடன் செயல்பட்டால் வீண் விரயங்களை  தவிர்ப்பீர்கள். உங்களின் உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் சற்று நீங்கும். உங்களுக்கு தெய்வ வழிபாடு மிகவும் நல்லது.

சிம்மம் :

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம்உள்ளதால் உங்களுக்கு  மன உளைச்சல் அதிகமாக இருக்கும். நீங்கள் செய்யும் வேலைகளில் கால தாமதம் ஏற்படலாம். தொழில் தொடர்பான புதிய முயற்சிகள் எதையும் மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் உண்டாகும் வீண் வாக்குவாதங்களை பெரிது படுத்த வேண்டாம். எதிலும் கவனமாக செயல்படுவீர்கள்.

கன்னி :

இன்று உங்களுக்கு தீடிரென பணவரவு ஏற்படும். சிலருக்கு புதிய வாகனங்களை வாங்குவதற்கான  யோகம் கிடைக்கும்.உங்களின் பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் ஏற்படும். நீங்கள் பார்க்கும் வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். நல்ல  காரியங்கள் கைகூடி வரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

துலாம் :

இன்று மன உறுதியோடு உங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையைஎதிர் கொள்வீர்கள். பெற்றோர்கள் உங்களுடன் ஆதரவாக இருப்பார்கள். வேலையில் ஏற்பட இருக்கும் பல புதிய புதிய மாற்றங்களால் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்திற்காக காத்திருந்த வங்கி கடன் எளிதில் கிடைக்கும். புத்திர வழியில் உங்களுக்கான அனுகூலப் பலன்கள் கிடைக்கும்.

விருச்சிகம் :

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகள் உண்டாகலாம். உத்தியோகத்தில் உங்களுடன் பணி செய்யும் சக ஊழியருடனான ஒற்றுமை குறைய வாய்ப்புள்ளது. நண்பர்களின் ஆலோசனையால் வியாபார முன்னேற்றம் ஓரளவுக்கு இருக்கும். கடன் பிரச்சினைகள் குறைந்து , பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.

தனுசு :

இன்று உங்களின் உடல்நிலையில் சோர்வு ஏற்பட்டு , சுறுசுறுப்பின்மையுடன் இருப்பீர்கள். புதிய உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடி ஏற்படுவதால் கடன் வாங்குவீர்கள்.தொழிலில் உங்களின் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதால் நல்ல லாபத்தை ஈட்டுவீர்கள்.

மகரம் :

இன்று உங்களின் வீடு தேடி இனிய செய்தி  வரும். வீட்டிற்கு உறவினர்கள் வருவதால் மன மகிழ்வுடன் இருப்பீர்கள்.  தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி அதன் மூலம் நல்ல இலாபம் பெறுவீர்கள். உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். ஆன்மீக செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

கும்பம் :

இன்று ஆர்வமுடன் அலுவலக பணிகளை மேற்கொள்வீர்கள். உங்கள் குடும்பத்தின் ஒற்றுமை அதிகரிக்கும். உங்களின்  பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உடல் நலம் நன்றாக இருக்கும். பெண்களின் திருமண கனவு நிறைவேறி மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் இருக்கும் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கை லாபகரமாக அமையும்.

மீனம் :

இன்று புதுவிதமான உற்சாகத்துடன் வேலையில் செயல்படுவீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் உறுதுணையாக இருந்து பலம் சேர்ப்பார்கள். சிலருக்கு ஆடம்பர பொருட்களை வாங்குவதில் யோகம் கிட்டும். தொழில் ரீதியாக பெரிய பெரிய மனிதர்களுடன் அறிமுகம் ஏற்பட்டு உங்களின் வருமானம் அதிகரிக்கும்.