“ஜீரோ பட்ஜெட் விவசாயம்” விவசாயிகளுக்கு நிர்மலாசீதாராமன் வலியுறுத்தல்..!!

விவசாயிகள் ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை பயன்படுத்த வேண்டுமென பட்ஜெட் உரையில்  நிர்மலாசீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.

இன்று மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019-20ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை   தாக்கல் செய்தார்.அப்போது பேசிய அவர்,வேளாண் சார்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை  மேம்படுத்துவதற்காக  மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. வாழ்க்கையை  எளிமையாக்குவது  விவசாயிகளுக்கும், தொழில் முறையை  எளிமையாக்குவது   வேளாண்மை சார்ந்த  தொழிலுக்கும் பொருந்தும் என்று  அவர் தெரிவித்தார்.

Image result for nirmala sitharaman

மேலும்  ஜீரோ பட்ஜெட் விவசாய முறையை விவசாயிகள் பின்பற்ற வேண்டும் என்று    வலியுறுத்தினார். இது புதிய முறையல்ல,ஏற்கனவே சில மாநிலங்கள் இதனை முயற்சி செய்து விவசாயிகள் நன்கு பயிற்சி பெற்றுள்ளதாக கூறிய  நிலையில்  இம்முறையை நாடு முழுவதும் பரவ செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார். இம்மாதிரியான  நடவடிக்கைகள்   விவசாயிகளின்  வருமானத்தை 2 மடங்கு  உயர்த்தும் என்றும்,  ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்பது, விலங்குகளின் கழிவுகளை உரமாகப்  பயன்படுத்தி  இயற்கை முறையில்  விவசாயம் செய்வதாகும். மகாராஷ்டிரவை சேர்ந்த  சுபாஷ் பலேகர்  25 ஆண்டிற்கு முன்னே   ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை முன்னெடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.