பஞ்சாப் முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான பகவந்த்சிங் மானுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து பாதுகாப்பு அச்சுறுத்தல் எழுந்திருப்பதால் நாட்டின் மிக உயரிய பாதுகாப்பான இசட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது. அதாவது பஞ்சாபில் மீண்டும் தலை தூக்கியுள்ள காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு எதிராக மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில் அவருக்கு அச்சுறுத்தல் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த ஆயுதம் ஏந்திய 55 வீரர்கள் சுழற்சி முறையில் அவர்களுக்கு அவருக்கு பாதுகாப்பு அளிக்கின்றனர்.
அதேபோல் நாட்டின் எந்த ஒரு பகுதிக்கு சென்றாலும் அவருக்கு இந்த பாதுகாப்பு வழங்கப்படுகிறது. மேலும் மத்திய உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் பரிந்துரையின் அடிப்படையில் பகவந்த்சிங் மானுக்கு இந்த பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் பஞ்சாப் மாநில காவல்துறை சார்பாக முதல்வரின் வீடு மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.