கொலையுதிர் காலம் படத்திற்கு இசை அமைக்கவில்லை…..யுவன் சங்கர் ராஜா ட்வீட்…..!!

‘உன்னைப்போல் ஒருவன்’, ‘பில்லா 2’ ஆகிய படங்களை சக்ரி டோலட்டி இயக்கியுள்ளார்.இவர் இயக்கத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்த திரைப்படம் ‘கொலையுதிர் காலம்’. ஆரம்பத்தில் யுவன் ‌ஷங்கர்ராஜா, பாலிவுட்டின் பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான பூஜா என்டர்டெயின்மென்ட்டுடன் இணைந்து படத்தைத் தயாரிப்பதாக இருந்தது. பின்பு சில காரணங்களால் படத்தை முழுமையாக முடிக்காமல் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பை கை விட்டதாக கூறப்படுகிறது.

Image result for நயன்தாரா யுவன் சங்கர் ராஜா

இந்நிலையில் ‘கொலையுதிர் காலம்’ படம் முழுமையாக  இங்கிலாந்திலேயே நடத்தி முடிக்கப்படும் என்று கூறப்படுகிறது, இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு
மீதம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. பின்னர் இப்படத்தை தெலுங்கு மற்றும் இந்தியில் தமன்னா, பிரபு தேவா ஆகியோரை வைத்துத் தொடர இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த படம் வெளிவருமா என்று சந்தேகம் நிலவி வந்த நிலையில் எட்செட்ரா என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் மதியழகன் இப்படத்தின் தமிழ் உரிமையைப் பெற்றுள்ளார்.
Image result for யுவன் சங்கர் ராஜா ‘கொலையுதிர் காலம்’
நேற்று ‘கொலையுதிர் காலம்’படத்தின் டிரெய்லர் வெளியானது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் சக்ரி மற்றும்  நடிகை நயந்தாரா, இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா யாரும் கலந்து கொள்ளவில்லை. டிரைய்லர் வெளியான சில மணிநேரத்தில் படத்துக்கு நான் இசையமைக்கவில்லை என யுவன் சங்கர் ராஜா ட்வீட் ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.