உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் யூடியூப் வீடியோக்களைப் பார்த்து 500 ரூபாய் கள்ளநோட்டுகளை அச்சடித்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். சதீஷ் ராய் மற்றும் பிரமோத் மிஸ்ரா என அடையாளம் காணப்பட்ட இவர்கள், ரூ.10 ஸ்டாம்ப் பேப்பரில் கம்ப்யூட்டர் பிரிண்டரைப் பயன்படுத்தி போலி 500 ரூபாய் நோட்டுகளை உருவாகியுள்ளனர்.

இந்த மோசடியில் மிர்சாபூரில் இருந்து முத்திரைத்தாள்களை வாங்கி பயன்படுத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. புழக்கத்தில் இருந்து 30,000 ரூபாய் மதிப்புள்ள 20 கள்ளநோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர், மேலும் அனைத்து நோட்டுகளும் ஒரே வரிசை எண்ணைக் கொண்டிருந்தது.

இவர்கள் மினரல் வாட்டர் விளம்பரங்களை அச்சிடும் பணி செய்து வந்த நிலையில், யூடியூப் மூலம் கள்ளநோட்டுகள் அச்சடிக்கும் முறைகளை கற்றுக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

போலீசார் கைதானவர்களிடம் இருந்து ஆல்டோ கார், லேப்டாப், பிரிண்டர், 27 முத்திரைத் தாள்கள், கள்ளநோட்டுகளை அச்சடிக்கப் பயன்படுத்திய உபகரணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.