டெல்லியில் உள்ள நிமா மருத்துவமனையில், ஜாவேத் அக்தர் என்ற டாக்டர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி, பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

காயங்களுடன் மருத்துவமனைக்கு வந்த இரண்டு இளைஞர்கள், காயங்களுக்கு மருந்து வைத்த பிறகு, டாக்டரை நேரில் சந்திக்க வேண்டும் என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. டாக்டர் அறைக்குள் நுழைந்த உடனே, அவர்கள் இருவரும் கைத்துப்பாக்கிக்களை எடுத்து டாக்டரை  சுட்டுக்கொன்றனர். அதன் பின் அங்கிருந்த சென்றனர். இதுகுறித்து அங்கிருந்த ஊழியர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்துக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த டெல்லி போலீசார், சந்தேகப்படுத்தப்படும் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.